கொத்து கொத்தாக இறந்த குழந்தைகள் ... கிரிக்கெட் ஸ்கோர் கேட்ட அமைச்சர்! சர்ச்சை வீடியோ

Report Print Abisha in இந்தியா

பீகார் மாநிலத்தில் குழந்தைகள் மூளைகாய்ச்சலால் குழந்தைகள் கொத்துகொத்தாக இறந்து வரும் சூழலில், சுகாதாரத்துறை கூட்டத்தில் அமைச்சர் கிரிக்கெட் ஸ்கோர் கேட்டது மிகவும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பீகாரில் மூளைக் காய்ச்சலால் தற்போது வரை 107 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மேலும், கடும் வெப்பம் காரணமாக கொத்து கொத்தாக உயிரிழப்பு அதிகரித்து வருகின்றது.

இதுதொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், முசாபர்பூரில், பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டேவுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அன்றைய தினம் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்ததால், எத்தனை விக்கெட் வீழ்ந்துள்ளது என்று மங்கள் பாண்டே கேட்க, அதற்கு 4 என பதில் வந்தது.

குழந்தைகள் உயிரிழப்பைக் காட்டிலும், கிரிக்கெட் ஸ்கோர் தான் முக்கியமா? ,என்று கேட்டுள்ள எதிர்கட்சிகள் மங்கள் பாண்டே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்