என்ன காரணம் ... அதிகரிக்கும் குழந்தைகளின் பலி எண்ணிக்கை: திணறடிக்கும் மக்கள்

Report Print Abisha in இந்தியா

பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 108-ஆக தற்போது அதிகரித்துள்ளது

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக அண்மையில் கண்டறியப்பட்டது. கடந்த ஜூன் 1-ஆம் திகதி பிறகு நோய் அறிகுறியுடன் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 197 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 91 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 108 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். முன்னதாக பீகாரில் கடும் வெயிலின் தாக்கம் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக அம்மாநிலத்தில், பெரும்பாலும் வெப்பநிலை 45டிகிரி செல்சியஸ் அளவிற்கு பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெப்பத்தின் அளவு அதிகரிப்பதே இறப்பிற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் மருத்துவமனைக்கு வந்திருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அவருக்கு எதிராக பலத்த குரல்கள் எழுப்பி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்