ரோஜாவுக்கு ஆந்திர அரசில் முக்கியப்பதவி... உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்.எல்.ஏ ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆட்சியை கைப்பற்றியது.

அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் 5 பேர் துணை முதலமைச்சர்களாகவும் 25 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்று கொண்டனர்.

ஆட்சியிலும், கட்சியிலும் அனைவரும் சமம் என்பதை காண்பிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

5 துணை முதல்வர்கள் என்பது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத முன் உதாரணம்.

ஆனால் நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.

துணை முதல்வர் பதவி, அமைச்சர் பதவி ஏதாவது ரோஜாவுக்கு வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் எந்தப் பதவியும் கிடைக்காததால் ரோஜா அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியானது.

இதனிடையே கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி வரும்போது அனைத்து எம்.எல்.ஏக்களும் அவரை வரவேற்க வந்திருந்தனர்.

ஆனால் ரோஜா அதிருப்தி காரணமாக வரவில்லை. இதனால் ரோஜாவை அழைத்து ஜெகன்மோகன் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் ஆந்திர அரசின் முக்கியத்துறையில் ரோஜாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்.எல்.ஏ ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers