வெளிநாட்டிலிருந்து குடும்பத்துடன் ஊருக்கு திரும்பிய தொழிலதிபர்.. நள்ளிரவில் நடந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் தொழிலபதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் நிஷாந்த் சரப். இவர் மனைவி அல்கா. தம்பதிக்கு அனன்யா (8) இஷாந்த் (4) என இரண்டு பிள்ளைகள் இருந்தனர்.

இந்நிலையில் நிஷாந்த் தனது குடும்பத்தாருடன் ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில் கடந்த வாரம் ஊருக்கு திரும்பினார்கள்.

நேற்று நள்ளிரவு நிஷாந்த் தனது மனைவி மற்றும் குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் அவர் வீட்டுக்கு நபர் ஒருவர் வந்த போது நால்வரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்த நிலையில் சிறுவன் இஷாந்த் தவிர மற்ற மூவரும் இறந்து விட்டது தெரியவந்தது.

இதையடுத்து இஷாந்த் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்தில் இருந்து பொலிசார் நிஷாந்த் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினார்கள்.

அதில், இந்த சம்பவத்துக்கும் எங்கள் குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் தொடர்பில்லை, இதற்கு நானே பொறுப்பு என எழுதப்பட்டிருந்தது.

பொலிசார் கூறுகையில், நிஷாந்தின் மனைவியும், குழந்தைகளும் தூங்கி கொண்டிருக்கும் போது அவர்களை நிஷாந்த் சுட்டிருக்கலாம் என கருதுகிறோம்.

நிஷாந்த் குடும்பத்தினர் அனைவரும் தொழிலபதிபர்கள் தான்.

நிஷாந்த் துணிக்கடை நடத்தி வந்தார், அவர்களுக்கு நகைக்கடை கூட உள்ளது.

அல்கா மற்றும் நிஷாந்தின் செல்போன்களை கைப்பற்றியுள்ளோம், அதன் மூலம் துப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்