இந்தியாவை கொள்ளையடித்த பிரித்தானியா, பிரான்ஸ்: திருடிய கோடிகளை திருப்பி கொடு

Report Print Basu in இந்தியா

இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் இங்கிருந்து அள்ளிச் சென்ற சொத்துக்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பாஜக மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கிந்திய கம்பெனி மூலம் இந்தியாவில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இங்கிலாந்து , பிரான்ஸ் போன்ற நாடுகள் கொள்ளையடித்துச் சென்றன. தற்போது, மத்திய பாஜக அரசு அந்த சொத்துக்களை திரும்பவும் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக பாஜக மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, இந்தியாவில் இருந்து இங்கிலாந்து திருடிச் சென்ற சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்க இதுவே சரியான தருணம்.

இங்கிலாந்து, ஹாலந்து, போர்ச்சுக்கல், பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்திய மக்களிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற சொத்துக்களை திரும்ப இந்தியாவிடமே ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers