அனைத்து பாடங்களிலும் 35 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி! ஆச்சரியப்படுத்திய மாணவன்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் மும்பை நகரில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் சரியாக 35 மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 35 ஆகும். எனினும், தேர்ச்சி பெறும் மாணவர்கள் 35 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பார்.

ஆனால், அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்ணை எடுப்பது அரிதாகும். இந்நிலையில், மும்பையின் புறநகர் பகுதியான மிரா ரோடு பகுதியைச் சேர்ந்த மாணவர் அக்‌ஷித் ஜாதவ்.

உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் இவர், சமீபத்தில் நடந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும், சரியாக 35 ஓட்டங்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

இந்த விடயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து மாணவனின் தந்தை கூறுகையில், ‘என் மகன் தனக்கு அனைத்து பாடங்களிலும் 35 மதிப்பெண்கள் கிடைத்ததை அறிந்து ஆச்சரியப்பட்டான்.

அவன் 55 சதவித மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தான். குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், தேர்ச்சி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers