திருமணமான இரண்டாவது நாளில் புதுமாப்பிள்ளைக்கு நடந்த சம்பவம்... நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்த்த வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான இரண்டாவது நாளில் புதுமாப்பிள்ளையை அவரின் மனைவி குடும்பத்தார் நடுரோட்டில் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 19 வயது பெண்ணை காதலித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 5ஆம் திகதி அப்பெண் வீட்டை விட்டு சென்று தனது காதலனை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்துக்கு காதலன் பெற்றோர் சம்மத்தம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தங்கள் மகளை காணவில்லை என அப்பெண்ணின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்த நிலையில் அவர்கள் பெண் திருமணம் செய்து கொண்டதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கடந்த 7ஆம் திகதி புதுமண தம்பதியை காவல் நிலையத்துக்கு வரவழைத்த பொலிசார் புதுப்பெண் குடும்பத்துடன் சமரசம் பேசினார்கள்.

இதையடுத்து புதுமாப்பிள்ளை தனது மனைவி மற்றும் தாயை அழைத்து கொண்டு அங்கிருந்து காரில் கிளம்பி சென்றார்.

பின்னர் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் சென்று கொண்டிருந்த காரை புதுப்பெண்ணின் குடும்பத்தார் தடுத்து நிறுத்தி புதுமாப்பிள்ளையை கீழே பிடித்து தள்ளினார்கள்.

பின்னர் அவரை சிலர் சரமாரியாக கத்தியால் குத்தினார்கள். அவரின் தாய் மற்றும் மனைவியை இரண்டு பெண்கள் சரமாரியாக அடித்தார்கள்.

இந்த காட்சியை அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்தப்படி இருந்தார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்த புதுமாப்பிள்ளையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட 6 பேரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்