மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 குழந்தைகள் பலி! சோக சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் 14 குழந்தைகள் மூளைக் காய்ச்சலில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை தொற்று ஆகியவற்றால் மூளைக் காய்ச்சல் ஏற்படும். இதற்கு அறிகுறியாக தலைவலி, காய்ச்சல், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் ஆகியவை தென்படும்.

இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள 38 குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களில் 21 குழந்தைகள் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் 14 குழந்தைகள் கெஜ்ரிவால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், தற்போது அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 14 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்