ஹொட்டல் அறையில் இளம் பெண்ணை கட்டிபிடித்து எம்.எல்.ஏ செய்த செயல்... சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வு

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் ஆய்வுக்காக சென்ற எம்எல்ஏ ஒருவர் தனது சகாக்களுடன் ஹொட்டல் அறையில் இளம்பெண் ஒருவரை கட்டிப்பிடித்து ஆட்டம் போட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பீகாரில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யதுவன்ஷ் குமார் யாதவ்.

50 வயதை கடந்த யாதவ் மணிப்பூர் மாநிலம் மோரே பகுதிக்கு ஆய்வு தொடர்பாக சென்றார்.

அவருடன் குழு உறுப்பினர்களான பாஜக எம்எல்ஏ சச்சின் பிரசாத், ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ ராஜ் குமார் ராய் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ ராஜா பக்கர் ஆகியோரும் சென்றனர்.

இந்நிலையில் அங்குள்ள ஹொட்டல் அறையில் தங்கியிருந்த யதுவன்ஷ் குமார் டீன்ஏஜ் வயதுள்ள ஒரு பெண்ணை அறைக்கு அழைத்து அவருடன் ஆட்டம் போட்டுள்ளார்.

இதனை சற்றும் விரும்பாத அந்த பெண் எம்எல்ஏவின் கையை தட்டிவிட்டும், தொடர்ந்து எம்எல்ஏ இளம் பெண்ணின் மீது கையை போட்டு கட்டிப்பிடித்து நடனம் ஆடியுள்ளார்.

எம்எல்ஏ யதுவன்ஷ் குமாருடன் சக எம்எல்ஏக்களும் ஆட்டம் போட்டுள்ளனர்

இதை யாரோ வீடியோவாக எடுத்து வெளியிட்ட நிலையில் சமுகவலைதளங்களில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்