தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் தான் அதிபர் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் - இலங்கை தலைவர் பேட்டி

Report Print Abisha in இந்தியா

சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பேட்டியளித்தார்

அவர் பேசியதாவது, திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டேன்

இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்து ஸ்டாலினிடம் விளக்கமாக எடுத்து கூறியுள்ளோம்

இந்த ஆண்டு இறுதியில் இலங்கை அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது,தமிழர்கள் முஸ்லீம்கள் பங்கு பெரிய அளவில் இருக்கும். இலங்கை தமிழர்கள் மற்றும் முஸ்லீம் தான் அதிபரை தேர்ந்தெடுப்பதில் மிகப் பெரிய பங்கு வகிக்க போகின்றனர்

முஸ்லீம் மக்களுக்குள் ஒளிந்து இருந்த ஒரு சிலர் செய்ததற்காக ஒட்டுமொத்த முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து தான் நாங்கள் கட்சி பாகுபாடின்றி ராஜினாமா முடிவை எடுத்தோம்

சட்டத்தை மீறி நடப்பவர்களை இலங்கை அரசாங்கம் கண்டிக்க தவறிவிட்டது.

குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்ட வருகிறது. இந்திய புலனாய்வு துறை முன்கூட்டியே எச்சரிக்கை அறிவித்து இருந்தும் இலங்கை அரசாங்கம் அலட்சியம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது

அதன் அடிப்படையில் தான் புலனாய்வு அதிகாரியை அதிபர் இந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்று குண்டுவெடிப்பு சம்பவம், இறக்குமதி செய்யப்பட்ட தீவிரவாதம் என்று தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்