குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்.. சில நாட்களுக்கு பின்னர் அவர் உடலில் இருந்து வெளியில் வந்த பொருளால் அதிர்ந்த கணவன்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்து விட்டதாக குற்றம் சாட்டி பெண்ணின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூரைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவரின் மனைவியான கவிதா மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண்குழந்தையை பெற்றெடுத்தார்.

அப்போது 80 கிலோ இருந்த அவரது உடல் எடை குறைந்து தற்போது 30 கிலோவாகி விட்டது.

பிரசவத்திற்குப் பின்பு கவிதாவுக்கு கடும் வயிற்று வலி இருந்த நிலையில் ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றுக்குள் மருத்துவர்கள் பயன்படுத்தும் முக கவசம் ஒன்று இருப்பது தெரிந்தது.

இதோடு அந்த முக கவசம் அவர் உடலில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கவிதாவின் கணவர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையின் கவனக்குறைவால் இது நடந்திருப்பதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

இதையறிந்து அங்கு வந்த பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தி கவிதாவை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கவிதா உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers