அன்று சிறுவனின் முழு படிப்பு செலவையும் ஏற்ற ரஜினி... இன்று அந்த சிறுவனுக்கு கிடைத்த கெளரவம் என்ன தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் சாலையில் கிடந்த பணத்தை பொலிசாரிடம் ஒப்படைத்து பாராட்டுக்களை பெற்ற சிறுவன் யாசின் பற்றி குறிப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் நந்தவன தோட்டத்தை சேர்ந்தவர் பாஷா. இவரது மனைவி அபி என்கிற அப்ரஜ்பேகம். பாஷா. இவர் ஊர் ஊராக சென்று துணி வியாபாரம் செய்து வருகிறார்.

இவர்களுக்கு இரண்டு மகன் உள்ளனர். மூத்த மகன் முகமதுமுஜமின். 9-ஆம் வகுப்பு படிக்கிறான். இளைய மகன் முகமதுயாசின், ஈரோடு சின்னசேமூர் துவக்க பள்ளியில் 3-ஆம் வகுப்பு படிக்கிறான். கடந்தாண்டு ஜூலை மாதம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற முகமதுயாசின் காலை 11 மணிக்கு இடைவேளையின்போது சிறுநீர் கழிக்க வில்லரசம்பட்டி சாலையில் நடந்து சென்றார்.

அப்போது, சாலையோரத்தில் ஒரு பை கிடந்ததை எடுத்து பார்த்தபோது, உள்ளே ரூபாய் நோட்டு கட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வகுப்பாசிரியை ஜெயந்தியிடம் பையை ஒப்படைத்தார். அவர், ரூபாய் நோட்டுகளை எண்ணிப்பார்த்தபோது ரூபாய் 50 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பணத்தை யாசின், ஈரோடு மாவட்ட எஸ்.பி. சக்திகணேசிடம் ஒப்படைத்தார். இது தொடர்பான செய்தி வெளியானதை கண்ட நடிகர் ரஜினிகாந்த் முகமதுயாசினை சென்னைக்கு வரவழைத்து தங்க செயின் பரிசாக கொடுத்ததுடன், சிறுவனின் முழு படிப்பு செல்வையும் தானே ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் சிறுவன் யாசின் பற்றிய குறிப்பு ஒன்று, இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.மாணவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில், ஆத்திசூடி - நேர்பட ஒழுகு என்ற தலைப்பின் கீழ் சிறுவன் யாசினின் புகைப்படத்துடன், அவரின் செயல் விளக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து முகமதுயாசினின் தாய் அப்ரஜ்பேகம் கூறுகையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் அழைத்தார்கள்.

யாசினின் பெயர், தமிழ்பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதை காண்பித்து பாராட்டு தெரிவித்தனர். எனது மகனின் செயல் மகிழ்ச்சியை தருகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்