மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது தந்தைக்கு நடந்த சோகம்

Report Print Vijay Amburore in இந்தியா

மும்பையில் மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற முதியவர் ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை புனே பகுதியை சேர்ந்தவர் தானாஜி லவங்கரே (60). இவருடைய மகன் சுமித்திற்கு ஜூன் மாதம் 19ம் திகதியன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதனையொட்டி தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது மகள் மற்றும் சில உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக மும்பை வந்திருந்துள்ளார். இரவு 10.55 மணியளவில் மின்சார ரயிலில் சென்றுகொண்டிருந்த அவர், திடீரென ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றதாக தெரிகிறது.

இதில் தடுமாறி கீழே விழுந்தவருக்கு பலத்த காயமடைந்துள்ளது. உடனடியாக அவரை மீட்ட ரயில்வே பொலிஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது அதில் ஏராளமான திருமண அழைப்பிதழ்கள் இருந்துள்ளன. பின்னர் அதிலிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்