இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்ட மோடி! வெளியான வீடியோ

Report Print Kabilan in இந்தியா

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டார்.

இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர், முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு சென்றார். அங்கு ஜனாதிபதி இப்ராஹிம் சோலியை சந்தித்து பேசிய அவர், பயங்கரவாத அச்சுறுத்தலை முறியடிக்க உலக நாடுகள் ஒன்று திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர், மாலத்தீவு ஜனாதிபதி வழங்கிய உயரிய விருதான நிஷான் இசுத்தீன் விருதை பெற்றுக் கொண்டு, தனது பயணத்தை முடித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட மோடிக்கு, ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு கொட்டும் மழையில் அளிக்கப்பட்ட அரசு மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்து பேசிய மோடி, ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் அசோக மரக்கன்றை நட்டு வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்ட செயிண்ட் ஷிரின் தேவாலயத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். மேலும், குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்காக தனது இதயம் கணப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers