13 பேருடன் மாயமான விமானம்.. தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு அறிவிப்பு!

Report Print Kabilan in இந்தியா

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் 13 பேருடன் மாயமான நிலையில், குறித்த விமானம் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3ஆம் திகதி இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு, இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் புறப்பட்டது.

மொத்தம் 13 பேருடன் கிளம்பிய குறித்த விமானம், அரை மணிநேரத்தில் அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.

தேடுதல் பணி தொடங்கி 6 நாட்கள் முடிந்தும், மாயமான விமானம் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. எனவே கூடுதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் விமானப்படை தளபதி தனோவா, ஜோர்காட் விமானப்படை தளத்திற்கு சென்று விமானத்தை தேடும் பணிகளை ஆய்வு செய்தார்.

இதற்கிடையில், மாயமான விமானம் தொடர்பாக தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று இந்திய விமானப் படையின் ஏர் மார்ஷல் ஆர்.டி.மாத்தூர் அறிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்