மனைவி குறித்து வெளியான தகவலால் மகிழ்ச்சியில் துள்ளிய கணவன்.. அடுத்த சில நிமிடங்களில் நடந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மருத்துவருக்கு பதிலாக செவிலியர் இளம்பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததில் தாயும், சேயும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அகிலா (25). கர்ப்பிணியான அகிலா, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

நேற்று மருத்துவர் இல்லாமல் செவிலியர் பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. பிரசவத்தில், அகிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து சுரேஷிடம் கூறப்பட்ட நிலையில் அவர் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், சிறிது நேரத்தில் குழந்தையும், அகிலாவும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அகிலாவின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் திரண்டு போராட்டம் நடத்தியதோடு இது சம்மந்தமானவர்களை கைது செய்ய வலியுறுத்தினார்கள்.

அவர்களிடம் பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி விட்டு தாய் மற்றும் சேயின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்