நடிகருக்கு ஒரு நீதி, 7 தமிழர்களுக்கு ஒரு நீதியா? தம்பி பேரறிவாளன் மூலம் நிரூபணம் என சீமான் காட்டம்

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி, ஏழு தமிழர்களுக்கு ஒரு நீதியா என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் இந்திய ஆயுதச் சட்டத்தில் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின்பும், மராட்டிய மாநில அரசே விடுதலை செய்தது.

இந்த தகவலானது தம்பி பேரறிவாளன் தொடுத்தத் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிய வந்திருக்கும் நிலையில் ஏழு தமிழர்களை விடுதலை செய்யத் தமிழக அரசுக்குத் தடையேதுமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

7 பேர் விடுதலைக்காக 161-வது சட்டப்பிரிவின்படி, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஏறக்குறைய ஒரு வருடத்தைக் கடக்கவிருக்கிற நிலையில் இன்னும் அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் தராது மவுனம் சாதிக்கிறார் தமிழக ஆளுநர். இது அப்பட்டமான விதிமீறல்.

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி? ஏழு தமிழர்க்கு ஒரு நீதியா?

தமிழக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers