ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகிறாரா நடிகை ரோஜா?

Report Print Arbin Arbin in இந்தியா

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த நடிகை ரோஜாவிற்கு துணை முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.

அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 171 சட்டமன்ற தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளை கைப்பற்றி, அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இன்று முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் தலைநகர் அமராவதியில் நடைபெற்றது.

இதில், ஆந்திர மாநிலத்தில் அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 5 துணை முதல்வர்களை நியமிப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த நகரி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரான நடிகை ரோஜா இந்த ஐந்து துணை முதல்வர்களில் ஒருவராக பொறுப்பேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்