14 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர்... நான் உயிரோடு இருக்கிறேன் என கதறல்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் பூர்வீக வீட்டை அபகரிப்பதற்காக தம்பி இறந்துவிட்டதாக 14 ஆண்டுகளுக்கு முன்பே போலியான இறப்பு சான்றிதழ் வாங்கிய அண்ணனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்லபாக்கத்தில் வசித்து வரும் ரவிக்குமார் என்பவரின் தந்தை பெயரில் அதே பகுதியில் பூர்வீக வீடு ஒன்று உள்ளது.

அந்த வீட்டிற்கு கிருஷ்ணனின் பெயரில் வீட்டு வரி கட்டிவந்த நிலையில், பாகப்பிரிவினை ஏதும் செய்யப்படாத அந்த வீட்டிற்கு அவரது அண்ணன் பன்னீர் செல்வத்தின் பெயரில் வீட்டு வரி கட்டப்படுவதாக ரவிக்குமாருக்கு தெரியவந்தது.

தந்தை இறந்த பின்னர் பாகபிரிவினை ஏதும் நடக்காத நிலையில் பூர்வீக வீட்டுக்கு பன்னீர் செல்வத்தின் பெயரில் வீட்டுவரி எப்படி கட்டப்படுகின்றது என்பதை அறிய வீட்டு பத்திரத்திற்கு வில்லாங்க சான்று பெற்றுள்ளார் ரவிக்குமார்.

அப்போது ரவிக்குமார் இறந்து விட்டதாக ஆவணம் அளித்து அண்ணன் பன்னீர் செல்வத்தின் பெயருக்கு வீடு மாற்றி பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

தந்தை பெயரில் உள்ள அந்த வீட்டை பெயர் மாற்றம் செய்வதற்காக தம்பி ரவிக்குமார் இறந்ததாக பொய்யான தகவலை கூறி கிராம நிர்வாக அலுவலரிடம் இறப்பு சான்று பெற்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ரவிக்குமார் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்

மேலும் போலி இறப்பு சான்றிதழ் மற்றும் சொத்து ஆவணங்களை வைத்து தனது அண்ணன், தனியார் நிதி நிறுவனம் ஒன்றை ஏமாற்றி கடன் பெற்றும் மோசடி செய்திருப்பதாகவும் ரவிக்குமார் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதோடு பூர்வீக வீட்டில் தனது பங்கை பெற்று தர கோரியும், 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஒருவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பதை விசாரிக்காமல் இறப்புச்சான்று அளித்த கிராம நிர்வாக அலுவலர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும் ரவிக்குமார் மனு அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers