இலங்கை தமிழர் எரித்துக்கொலை.. கைதான மற்றொரு இலங்கையர்! தமிழகத்தில் நடந்த சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் நாகர்கோவில் அருகே இலங்கை தமிழரை எரித்துக் கொலை செய்ததாக, மற்றொரு இலங்கையர் உட்பட மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் மாவட்டத்தை அடுத்த கணிகமாணிக்கபுரம் சுடுகாட்டில், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக, கோட்டாறு பொலிசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த பொலிசார், இதுகுறித்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது எரித்துக் கொல்லப்பட்ட நபர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ரெசி(34) என்பதும், வள்ளியூரில் 2004ஆம் ஆண்டு முதல் தனது மனைவியை பிரித்து அவர் வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், ரெசி கன்னியாகுமரி அருகேயுள்ள பெருமாள்புரம் அகதிகள் முகாமில் உள்ள பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இதனை அப்பெண்ணின் சகோதரர் கேதீஸ்வரன் கண்டித்துள்ளார். ஆனால், ரெசி தொடர்ந்து அப்பெண்ணுடன் பழகி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கேதீஸ்வரனுக்கும், ரெசிக்கும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கேதீஸ்வரன் கத்தியால் ரெசியை குத்தியுள்ளார். அதன் பின்னர், அவரது நண்பர்கள் கண்ணன், பைசல் ஆகியோர் காரில் ரெசியை தூக்கிப்போட்டு நாகர்கோவிலுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, கணிகமாணிக்கபுரம் சுடுகாட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி ரெசியை எரித்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கேதீஸ்வரன், அவரது நண்பர்கள் கண்ணன், பைசல் ஆகியோரை கைது கோட்டாறு பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers