விடிந்தால் திருமணம்! அதிகாலை 3 மணிக்கு மணமகன் மற்றும் குடும்பத்தாரை அழவைத்த மணப்பெண்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகள் திடீரென மாயமான சம்பவத்தையடுத்து மாப்பிள்ளை மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியில் கண்ணீர் விட்டனர்.

முசிறியை அடுத்த பைத்தம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.

இவர் தனது மகள் இந்துமதிக்கு அதே பகுதியை சேர்ந்த உறவினரின் மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார். இதற்காக திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்ட நிலையில் நேற்று முசிறியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் நடக்க இருந்தது.

இதற்காக 5ம் திகதி இரவு மணமகள் இந்துமதியை உறவினர்கள் அழைத்து கொண்டு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.

விடிந்தவுடன் 6ம் திகதியான நேற்று திருமணம் என்ற நிலையில் இந்துமதி அதிகாலை 3 மணிக்கு மாயமானார். பல இடங்களில் தேடியும் இந்துமதி கிடைக்கவில்லை. இதனால் திருமணம் நின்று போனது.

இது தொடர்பாக பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து இந்துமதியை தேடி வருகின்றனர்.

திருமண நாளில் மணமகள் மாயமான சம்பவம் மணமகன் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers