தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர்பஞ்சம் இளைஞரின் உயிரை பறித்தது...!

Report Print Abisha in இந்தியா

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தினால் ஒரு இளைஞரை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரிதாடுகின்றது. அங்காங்கே மழை பெய்தாலும் அது மாநிலம் முழுவதும் பூர்த்தி செய்ய இயலவில்லை. இதனால் காலிக்குடங்களுடன் நீரைத் தேடி ஓடுகிறார்கள் மக்கள்.

தஞ்சை மாவட்டம் விளார் வடக்கு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் ஆனந்தபாபு, மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும், சமூக ஆர்வலாகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த குமார் மற்றும் அவது மகன்களான கோகுல்நாத் கோபிநாத் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோருக்கும் ஆனந்த பாபுவுக்கும் தண்ணீர் பிடிக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் குமார் மற்றும் அவரது மகன்கள் ஆனந்தபாபுவை உருட்டுகட்டையால் தாக்கி உள்ளனர். மேலும் கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஆனந்தபாபு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். மேலும், தந்தை தர்மராஜ் தடுக்கவந்தபோது அவரையும் தாக்கி உள்ளனர்.

இந்நிலையில், ஆனந்தபாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். தர்மராஜ்-ம் குமார் கோகுல்நாத் கோபிநாத்துக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ஸ்ரீநாத் மட்டும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers