சீமான் கட்சியினரின் நெகிழ்ச்சி செயல்... இரத்தம் பற்றாக்குறை போக்க

Report Print Abisha in இந்தியா

நாம்தமிழர் கட்சியின் சார்பில் இரத்த பற்றாக்குறைக்கு தீர்வு காண அக்கட்யின் உறுப்பினர்கள் இரத்த தானம் செய்ய கட்சி தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேமித்து வைத்திருந்த அனைத்து இரத்தமுத் காலியாகிவிட்டதாக அந்த மருத்துவமனை அறிவித்திருந்தது. மேலும், நோயாளிகள் இரத்தம் இன்றி சிகிச்சைக்கு சிரமப்படுவதாக தெரிவித்திருந்தது. தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் இரத்தம் பற்றக்குறை ஏற்பட்டது என்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கட்சி தொண்டர்கள் இரத்தம் தானமாக வழங்க கேட்டு கொள்வதாகவும். ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு வரும் நோயளிகளின் உயிரை காக்க முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers