நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை பார்க்க வந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி... விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருவர் மாப்பிள்ளையை பார்க்க சென்ற இடத்தில், அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் பெற்றோரை இழந்த 23 வயது இளம்பெண் ஒருவர் உறவினர் பாதுகாப்பில் வசித்து வந்தார்.

அவருக்கு உறவினர்கள் சென்னையில் டிரைவர் வேலை பார்க்கும் வாலிபரை திருமணம் பேசி நிச்சயம் செய்தனர்.

திருமண நிச்சயத்திற்கு பிறகு இருவரும் அடிக்கடி போன் பேசி வந்த நிலையில், அந்த பெண் சில வாரங்களுக்கு முன்பு அவரை பார்ப்பதற்காக சென்னை சென்றுள்ளது.

சென்னை சென்ற பெண் அதன் பின் வீடு திரும்பவே இல்லை, இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் உடனடியாக இது குறித்து டிரைவருக்கு போன் செய்து கேட்டுள்ளனர்.

அப்போது அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண், சென்னை கோயம்பேட்டில் நிற்பதாக எனக்கு போன் செய்தார்.

அன்று நான், வெளியூர் சவாரி சென்றிருந்தேன். இதனால் அந்த பெண்ணை உடனடியாக ஊருக்கு புறப்பட்டு செல்லும்படி கூறினேன் என்று உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

அந்த பெண் ஊர் திரும்பாததால் அவர், சென்னையில் மாயமாகி இருக்கவேண்டும் என்று உறவினர்கள் கருதிய உறவினர்கள், உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனால் பொலிசார் மாயமான பெண்ணை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

டிரைவரிடம் பெண் பேசிய செல்போன் எண்ணை கைப்பற்றிய பொலிசார் அந்த எண்ணுக்கு சொந்தமான நபரை கண்டுபிடிக்க முயன்றனர்.

இதில் அந்த எண்ணுக்குரிய நபர் சென்னையைச் சேர்ந்த பெண் என தெரிய வந்தது. அந்த பெண்ணின் பின்னணி குறித்து பொலிசார் விசாரித்த போது, அந்த சென்னை பெண் விபசார கும்பலுடன் தொடர்புடையவர் என தெரிய வந்தது.

இதன் மூலம் டிரைவரை தேடி சென்னை சென்ற குமரி பெண் விபசார கும்பலிடம் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் பொலிசாருக்கு ஏற்பட்டது.

அவர்கள், சென்னையிலேயே தங்கியிருந்து விபசார கும்பலுடன் தொடர்புடைய பெண்ணை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, அவர், குமரி பெண்ணை சென்னையில் பணிபுரியும் பொலிசார் ஒருவரிடம் ஒப்படைத்தது தெரிய வந்தது.

அதன் பின் பொலிசாரையும் கண்டுபிடித்து விசாரித்த போது, பெண்ணை கடத்தி சென்றது விபசார கும்பலைச் சேர்ந்த பெண்ணும், சென்னை பொலிசாரும் தான் என தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நேற்று பெண், கண்டுபிடிக்கப்பட்டார்.

மீட்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமைப் பற்றி பொலிசாரிடம் கூறுகையில்,

எனக்கு நிச்சயம் செய்யப்பட்ட டிரைவரை தேடி சென்னைக்கு சென்றேன். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து டிரைவரின் வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் நின்றேன். அப்போது பெண் ஒருவர் என்னிடம் வந்து விவரம் கேட்டார். அவரிடம் என்னைப்பற்றி கூறினேன். அந்த பெண், என்னை டிரைவர் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறினார்.

மேலும் டிரைவர் சென்னையில் வேலை பார்ப்பதால் எனக்கும், சென்னையிலேயே வேலை வாங்கி தருவதாக கூறினார். இதற்காக அவருக்கு தெரிந்த பொலிசார் ஒருவரிடம் என்னை ஒப்படைத்தார். அந்த பொலிஸ்காரர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

அவரிடமிருந்து தப்பி வெளியே வந்தேன். சாலையில் நடந்து சென்றபோது, இன்னொரு வாலிபரும் என்னை கடத்திச் சென்று செக்ஸ் தொல்லை கொடுத்தார். பின்னர் ஊருக்கு வர இரயில் நிலையம் வந்தபோது, பொலிசாஎ என்னை கண்டுபிடித்து இங்கு அழைத்து வந்தனர் என கூறியுள்ளார்.

மேலும் பொலிசாரின் விசாரணையில் அந்த பெண் சில தகவல்களை முன்னுக்கு பின்னாக கூறியதால், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்