மனைவியின் தலையை துண்டாக வெட்டி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்ற கணவன்

Report Print Vijay Amburore in இந்தியா

மேற்கு வங்க மாநிலத்தில் மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன், அதனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அபிஜித் தாஸ் (30) என்பவர் நேற்றைக்கு முன்தினம், பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த பொலிஸாரிடம், காவல் ஆய்வாளரை பார்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார். அபிஜித் தாஸை மனநலம் பாதிக்கப்பட்டவராக நினைத்த அந்த பொலிஸார் , என்ன காரணம் என கேட்டுள்ளார்.

அப்பொழுது அபிஜித் தாஸ், தான் கொண்டு வந்திருந்த கைப்பையிலிருந்து மனைவியின் தலையை வெளியில் எடுத்துள்ளார். நான் என்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டேன். அவருடைய தலையை காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூலாக பதில் கூறியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பொலிஸார், வேகமாக காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும் அபிஜித் தாஸ் வீட்டிற்கு சென்று அவருடைய மனைவி அம்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் அபிஜித் தாஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாக இருந்ததாகவே பலரும் பதிலளித்துள்ளனர்.

அபிஜித் தாஸிடம் விசாரணை மேற்கொள்கையில், வரதட்சணை தான் காரணாம் என முதலில் கூறியவர், அதன்பிறகு உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

பக்கத்து வீட்டை சேர்ந்த நபருடன் அம்பாவிற்கு தொடர்பு இருந்ததாகவும், அதனை தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், கை கால்களை கட்டிப்போட்டு தலையை வெட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்