டிக்டாக் ஆப்பில் வீடியோ வெளியிட்ட மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்

Report Print Vijay Amburore in இந்தியா

கோவை மாவட்டத்தில் டிக்டாக் ஆப்பில் அதிகமாக வீடியோ வெளியிட்டு வந்த மனைவியை, கணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த கனகராஜ் என்பவர் செண்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு நந்தினி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு 11 வயதில் காவ்யா என்ற மகளும், 5 வயதில் அஷ்வின் என்கிற மகனும் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனியார் கல்லூரியில் கூலி வேலை செய்து வந்த நந்தினி, டிக்டாக் ஆப்பில் அதிக வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

அதோடு அல்லாமல் செல்போனிலும் யாருடனோ அதிகமாக பேசி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

நீண்ட நேரம் நந்தினியின் செல்போனுக்கு முயற்சித்த போது பிசி என வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ் உடனே மனைவி வேலை செய்து வரும் தனியார் கல்லூரிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு நந்தினியை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் சரிந்து விழுந்த நந்தினியை அங்கிருந்தவர்கள் வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், தற்போது கனகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...