உண்மையே..! 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகாரிப்பு; மோடி அரசு அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளிவிற்கு நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

மோடி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்ற நிலையில், 2017-18 நாட்டில் வேலையின்மை 6.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட தகவல் மூலம், நாட்டில் 7.8 சதவீத நகர்ப்புற இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதும், 5.3 சதவீத கிராமப்புற இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர் என தெரியவந்துள்ளது.

மேலும், இந்தியளவில் ஆண்களில் 6.2 சதவீத பேரும், பெண்களில் 5.7 சதவீத பேரும் வேலையில்லாமல் உள்ளனர். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கடந்த ஜனவரி மாதம் நாட்டில் வேலையின்மை குறித்து வெளியான தகவல் உண்மை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers