கிறிஸ்தவ மத போதகரை குடும்பத்துடன் எரித்துக் கொன்றவர்.. மோடி அரசில் அமைச்சர் பொறுப்பு...!

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவில் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் பொறுப்பேற்கும் அமைச்சர் ஒருவரின் கடந்த காலம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் இன்று அமைச்சர்கள் யார் யார் என்ற பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

இதில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிரதாப் சந்திரா சாரங்கியின் கடந்த காலம் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாரங்கி, பஜ்ரங் தல் எனப்படும் கடும்போக்கு வலதுசாரி அமைப்பின் தலைவராக சில ஆண்டுகளுக்கு முன்னர் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்தியாவில் தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு கொண்ட இந்த அமைப்பானது மதமாற்றத்திற்கு எதிராக கடுமையாக போராடி வந்துள்ளது.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய மத போதகரான கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒடிசாவில் மத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த விவகாரம் பஜ்ரங் தல் அமைப்புக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடந்த 1999 ஆம் ஆண்டு கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில் இருந்து கிரஹாம் ஸ்டெயினின் மனைவி கிளாடிஸ் தப்பித்துக் கொண்டார். குறித்த தாக்குதலுக்கு பின்னால் சாரங்கியும் அவரது பஜ்ரங் தல் அமைப்பு இருப்பதாக பல கிறிஸ்தவ அமைப்புகள் குற்றஞ்சாட்டின.

ஆனால் உத்தியோகப்பூர்வ விசாரணையில், இந்த விவகாரத்தில் சாரங்கி அல்லது பஜ்ரங் தல் அமைப்பு ஈடுபட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என நிரூபணமானது.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக தாரா சிங் என்பவர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர்.

2005 ஆம் ஆண்டு தாரா சிங் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதுடன், அவருடன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட 11 பேரும் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது மோடி அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள சாரங்கி முன்னர் கடும்போக்கு வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர் என்றாலும்,

தற்போது மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருபவர். இதனாலையே அவரை ஒடிசாவின் மோடி என பாஜக தொண்டர்கள் குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers