மோடி 2.0... அமைச்சரவை பட்டியல் வெளியீடு: அமித் ஷாவிற்கு இந்த இலாக்கா

Report Print Basu in இந்தியா

பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் ராஷ்டிரபதி பவனில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சத்திய பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டனர். உலக தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இன்று மே 31ம் திகதி 24 மத்திய அமைச்சர்களின் இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி - அணுசக்தித்துறை, விண்வெளித்துறை, மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை, முக்கிய கொள்கை முடிவுகள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் உள்ளன.

அமைச்சரவை பட்டியல்:

 • ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத்துறை
 • அமித் ஷா - உள்துறை
 • நித்ய ஜெய்ராம் கட்காரி - சாலை போக்குவரத்து துறை
 • டி. வி. சதனாந்த கவுடா - ரசாயனம் மற்றும் உரத்துறை
 • நிர்மலா சீதாராமன் - நிதித்துறை
 • ராம் விலாஸ் பாஸ்வான் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
 • நரேந்திர சிங் தோமர் - வோளண்துறை மற்றும் உள்ளாட்சித்துறை
 • ரவிசங்கர் பிரசாத் - சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு
 • ஹர்சிம்ரத் கவுர் - உணவு பதப்படுத்துதல் துறை
 • தாவார் சந்த் கெலோட் - சமூகநீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறை
 • டாக்டர். சுப்ரமணியம் ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை
 • ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' - மனிதவள மேம்பாட்டுத்துறை
 • அர்ஜுன் முண்டா - பழங்குடி நலத்துறை
 • ஸ்மிருதி இரானி - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை
 • டாக்டர். ஹர்ஷ் வர்தன் - மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை, அறிவியல் தொழில்நுட்பம், மற்றும் புவி அறிவியல்
 • பிரகாஷ் ஜவேடகர் - சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் செய்தி ஒளிப்பரப்புத்துறை
 • பியுஷ் கோயல் - ரயில்வே, வர்த்தகம், மற்றும் தொழில்துறை
 • தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியத்துறை
 • முக்தர் அப்பாஸ் நக்வி - சிறுபாண்மை நலத்துறை
 • பிரகலாத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி, மற்றும் சுரங்கம்
 • டாக்டர். மகேந்திரநாத் பாண்டே - திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்
 • அர்விந்த் கணபதி சாவந்த் - கனரக தொழில்துறை
 • கிரிராஜ் சிங் - மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை
 • கஜேந்திர சிங் ஷெகாவத் - ஜல்சக்தி

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்