மோடி 2.0.. இலங்கையுடன் முதல் பேச்சுவார்த்தை: ஏதற்காக தெரியுமா

Report Print Basu in இந்தியா

இரண்டாவது முறையாக இந்திய பிரதமரான மோடி, பதவியேற்று முதன் முதலாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மே 30ம் திகதி பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன உட்பட பல நாட்டு தலைவர்கள் கலந்துக்கொண்டு மோடிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனையடுத்து, இன்று மே 31ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி மத்திரிபால சிறிசேனவும் ஐதராபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இலங்கைவுடனான உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்தை முன்னெடுக்கப்பட்டதாக மோடி தெரிவித்துள்ளார். மேலும், இதன்போது, இரு நாட்டு தலைவர்களும் இந்தியா-இலங்கை ஒத்துழைப்பை மேம்படுத்த பல்வேறு அம்சங்களை விவாதித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers