16 வயது பெண்ணின் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி மனு

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 16 வயது பெண்ணின் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன்னுடைய 16 வயது மகள் மாயமானதாகவும், ஆனால் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், புகார் அளித்தவரின் மகளுக்கு திருமணம் நடந்திருந்தது குறித்து தெரிந்துகொண்டனர்.

இதனையடுத்து அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மட்டுமின்றி அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதாவும், 18 வயது நிரம்பாத அவருக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி தரவும் வலியுறுத்தி மனு ஒன்று தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், மருத்துவர்கள் குழு அமைத்து அந்தப் பெண்ணை பரிசோதனை செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கருக்கலைப்பு செய்தால் அந்தப் பெண்ணுக்கு உடலளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers