தொப்பியை கழட்டு.. ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு.. இளைஞன் துஷ்பிரயோகம்: தொடரும் மத வன்முறை

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் மர்ம நபர்கள், முஸ்லிம் இளைஞனை வழிமறித்து தொப்பியை கழட்டு, ஜெய் ஸ்ரீ ராம் என கூற சொல்லி துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருகிராம், ஜக்குப்புரா பகுதியை சேர்ந்த 25 வயதான முகமது பர்கத் என்ற இளைஞனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். மே 25ம் திகதி இரவு இத்தாக்குதல் சம்பவம் நடந்ததாக பர்கத் தெரிவித்துள்ளார்.

சம்வம் குறித்து பாதிக்கப்பட்ட பர்கத் கூறியதாவது, சம்பவத்தன்று இரவு நான் மசூதியிலிருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது, ஆறு போர் கொண்ட கும்பல் என்னை வழிமறித்தது. அதில், ஒருவன் தவறான வார்த்தையால் திட்டி இப்பகுதியில் தொப்பி அணிய அனுமதி இல்லை என கூறினான்.

நான் மசூதியிலிருந்து வருகிறேன் என கூறியவுடன் அவன் என்னை அறைந்தான். பின்னர், பாரத் மாதா கி ஜே, ஜெய் ஸ்ரீ ராம் என கூற சொல்லி வற்புறுத்தினான். நான் மறுத்தேன், நீ கூறவில்லை என்றால் உன்னை பன்றி இறைச்சி உண்ண வைப்பேன் என அவன் மிரட்டினான்.

பின்னர், ஒரு குச்சியை எடுத்து அடித்து என்னை துஷ்பிரயோகம் செய்தான். நான் அவனை தள்ளி விட்டு ஓட முயன்ற போது என் சட்டையை பிடித்து கிழித்தான். நான் அழ தொடங்கியவுடன், நான்கு பேர் இருசக்கர வாகனத்திலும், இருவர் நடந்தும் தப்பிச்சென்றனர் என பாதிக்கப்பட்ட பர்கத் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்துள்ள பொலிசார் குற்றவாளிகளை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers