விடமாட்டோம்.. சுட்டுக் கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை சுமந்த ஸ்மிரிதி இராணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தனது ஆதரவாளரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஸ்மிரிதி இரானி, அவரது உடலை சுமந்து சென்றுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார். தேர்தல் பிரசாரத்தின்போது, பரவுலியா என்ற கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாய்த்து தலைவர் சுரேந்திர சிங், ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டார்.

இதனையடுத்து சுரேந்தர் சிங் நேற்று இரவு வீட்டுக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் அவரை சுட்டுவிட்டு தப்பினர்.

படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரண மடைந்தார்.

இதுபற்றி விசாரணை நடத்திய பொலிசார், 2 பேரை கைது செய்துள்ளனர். ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அமேதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கேள்விபட்டதும் அமேதி எம்.பி, ஸ்மிருதி இரானி, சுரேந்திர சிங் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல அங்கு சென்றுள்ளார்.

மேலும், சுரேந்திர சிங்கின் இறுதி ஊர்வலத்திலும் ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டார். அத்துடன், அவரது உடலை தனது தோளில் தாங்கிச் சென்றார் ஸ்மிரிதி இரானி. பாஜகவினர் பலரும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers