மூத்த தலைவர்கள் தொல்லை கொடுத்தார்கள்! ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு

Report Print Kabilan in இந்தியா

காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், தங்கள் மகன்களுக்கு சீட் கேட்டு தொல்லை கொடுத்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நேற்றைய தினம், காங்கிரஸ் தோல்வி குறித்து ஆராய காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்ததை, காரிய கமிட்டி ஏற்றுக் கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து தோல்வி குறித்து ஆராயும் போது, கட்சியின் கீழ்மட்ட தலைவர்களின் செயல்பாடுகளை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.

அத்துடன், பிரச்சாரம் மூலம் காங்கிரஸின் திட்டங்களை சரியாக மக்களிடம் சேர்க்கவில்லை என்றும், தான் மேற்கொண்ட பிரச்சார விடயங்களைக் கூட வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், கீழ்மட்ட தலைவர்கள் பா.ஜ.கவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரச்சார யுக்திகளை கையாளவில்லை என்றும், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ப.சிதம்பரம் போன்றோர் தனது மகன்களுக்கு சீட் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததாகவும் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.

தான் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அதை ஏற்க அவர்கள் மறுத்ததாகவும், விட்டுக்கொடுக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை, இப்படி இருந்தால் எப்படி கட்சியை நடத்துவது என்றும் ராகுல் காந்தி கடுமையாக பேசியதாக தெரிகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers