ராகுலை வீழ்த்திய ஸ்மிதி ராணியின் உதவியாளருக்கு நேர்ந்த கதி

Report Print Basu in இந்தியா

மத்திய அமைச்சர் ஸ்மிதி ராணியின் நெருங்கிய உதவியாளர் அமேதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் உதவியாளரான சுரேந்திர சிங், Baraulia கிராமத்தில் உள்ள தனது வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

அமேதி நாடாளுமன்ற தொகுதியில் ஸ்மிதி ராணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த முக்கிய கட்சி நிர்வாகிகளில் சுரேந்திர சிங்-கும் ஒருவர். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிதி ராணி 55,120 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேந்திர சிங் கொலை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும், கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என கூறியுள்ள பொலிசார், பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். எனினும், இது அரசியல் கொலை என சுரேந்திர சிங்கின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers