நான் அதிகாரம் இல்லாத சி.எம்... முதல்வராக தொடர விரும்பவில்லை: மம்தா அதிரடி அறிவிப்பு

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் மேற்கு வங்க முதல்வராக தொடர நான் விரும்பவில்லை என அம்மாநில முதல்வர் மம்தாக பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளில், 2014 ஆம் ஆண்டு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்பெற்றிருந்த பாஜக, இம்முறை 18 தொகுதிகளை கைப்பற்றியது. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறியதாவது, நான் முதல்வராக தொடர விரும்பவில்லை என கட்சியினரிடம் கூறிவிட்டேன்.

ஆறு மாதங்கள் என்னால் பணியாற்ற முடியாது என கட்சிகாரர்களிடம் கூறியுள்ளேன்.நான் ஒரு அதிகாரம் இல்லாத முதல்வர். என்னால் இதை ஏற்க முடியவில்லை. நான் முதல்வராக தொடர விரும்பவில்லை. இந்த நாற்காலியால் ஒரு பயனும் இல்லை. கட்சியின் சின்னம் தான் எனக்கு மிகவும் முக்கியம்.

மக்கள் ஒரு தைரியமான நடவடிக்கை எடுக்க தயாராக இருந்தால் மட்டுமே நான் முதல்வராக தொடருவேன். நமது வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும். பாஜக பெற்ற வாக்கு இடதுசாரிகளுடையது. இது தான் கணக்கு.

ராஜஸ்தான், குஜராத் மற்றும் அரியானாவில் பாஜக-வால் எப்படி அதிக தொகுதிகளில் வெற்றிப்பெற முடிந்தது? இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை பற்றி பேச மக்கள் பயப்படுகிறார்கள், ஆனால், நான் பயப்பட மாட்டேன் என மம்தா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்