ரஜினி-கமல் தேர்தலில் நின்றால் யார் வெற்றி பெறுவார்கள்? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ரஜினி மற்றும் கமல் தேர்தலில் நின்றால் என்ன நடக்கும் என்பது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் பெருவாரியான வாக்குகளை பெற்று தங்களுக்கும் மக்களின் செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபித்து காட்டியுள்ளது.

ஆனால் அதே சமயம் அரசியலுக்கு வருவேன் என்று கூறிக் கொண்டிருக்கும் ரஜினியோ இன்னும் அரசியலில் முழு வீச்சில் இறங்காமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் கடந்த 1991-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான பிலிமாலயா இதழில் இடம் பெற்ற கேள்வி ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், கமல்-ரஜினி தேர்தலில் நின்றால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு கமல் தேர்தல் அறிக்கையை படித்து புரிந்து கொள்வதற்குள் ரஜினியின் வெற்றி விழா ஊர்வலம் முடிந்திருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers