என்னுடைய மகளுக்கு இப்படி நடந்ததே... வெற்றி பெற்ற மோடியிடம் முதல் ஆளாக கேள்வி எழுப்பிய பிரபல நடிகர்

Report Print Santhan in இந்தியா

தன்னுடைய மகளுக்கு தொல்லை கொடுத்த பாஜக ஆதரவாளர் குறித்து நடிகர் காஷ்யாப் புகார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ளது.

இதனால் பிரதமராகவுள்ள நரேந்திர மோடிக்கு உலகத்தலைவர்கள், அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் அனுராக் காஷ்யப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மோடி அவர்களுக்கு, உங்கள் வெற்றிக்கு வாழ்த்துகள். அனைவரையும் உள்ளடக்கிய வெற்றி என்று நீங்கள் பேசியிருப்பதற்கு நன்றி.

அதே நேரம், நான் உங்கள் எதிர்ப்பாளராக இருப்பதால், என் மகளை மிரட்டும் உங்கள் ஆதரவாளர்களை எப்படி அணுகுவது என்று எங்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார், இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்