திரும்பிய வரலாறு... அன்று சாதித்த கருணாநிதி... இன்று ஸ்டாலின்!

Report Print Arbin Arbin in இந்தியா

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளை அள்ளியது வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 38-ஐ அள்ளியுள்ளது.

இதில் திமுக தனித்து 23 தொகுதிகளையும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 9 தொகுதிகளையும் இடதுசாரிகள் 4 தொகுதிகளையும் முஸ்லீம் லீக் ஒரு தொகுதியையும் வென்றுள்ளது.

இதேப்போன்று திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று சந்தித்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் திமுக 38 தொகுதிகளை அள்ளியது தெரியவந்துள்ளது.

இதில்,

  • திமுக - 23
  • காங்கிரஸ் 9
  • இடதுசாரிகள் 4
  • முஸ்லீம் லீக் 1

என 1971 ஆம் ஆண்டும் திமுகவால் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers