பிரதமர் மோடியை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற வேட்பாளர்! யார் இவர்?

Report Print Santhan in இந்தியா

மக்களவை தேர்தலில் பாஜகவில் பிரதமர் மோடியை அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை குஜராத்தைச் சேர்ந்த வேட்பாளர் பெற்றுள்ளார்.

இந்தியாவில் மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டை விட அதிகமாக தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதில் வரணாசி தொகுதியில் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி 4 லட்சத்து 79 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இது தான் பாஜக வேட்பாளரின் மிகப் பெரிய வெற்றி என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஜராத் மாநிலத்தின் நவ்சாரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சிஆர் பாட்டீல் 6 லட்சத்து 89 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.

இதன் மூலம் 2019-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers