பாதுகாப்பு படைக்கு சிம்ம சொப்பனமான முக்கிய தீவிரவாதி: ஒரே இரவில் பொறிவைத்து தூக்கியது அம்பலம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படைக்கு நீண்ட காலமாக தண்ணி காட்டிவந்த முக்கிய தீவிரவாதி ஜாகீர் மூசா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பல பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுத்துள்ள அல்கொய்தா தீவிரவாதி அமைப்பின் ஆதரவில் இந்தியாவில் இயங்கிய அன்சர் கஸ்வத்துல் ஹிந்த் அமைப்பின் தலைவராக ஜாகீர் மூசா செயல்பட்டுவந்துள்ளார்.

இந்த நிலையில் நீண்ட காலமாக பாதுகாப்பு படையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மூசா நேற்று புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

புல்வாமா மாவட்டம், தத்சரா கிராமத்தில் உள்ள திரால் பகுதியில் அன்சர் கஸ்வதுல் ஹிந்த் அமைப்பின் தலைவர் ஜாகீர் மூசா உள்ளிட்ட சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராணுவத்தினர், காஷ்மீர் பொலிசார், துணை ராணுவப்படையினர் ஆகியோர் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை கண்டறிந்த பாதுகாப்புப் படையினர் அவர்களை சரண்அடைந்துவிடுவாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர்கள் அதற்கு மறுத்து பாதுகாப்பு படையினரை நோக்கி, கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்து திருப்பிச் சுட்டனர். இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரின் உடலை அடையாளம் கண்டதில் ஜம்மு காஷ்மீரில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஜாகீர் மூசா என்பது தெரியவந்தது.

சுட்டுக்கொல்லப்பட்ட ஜாகீர் மூசாவிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், பணம், தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு ஜாகீர் மூசாவின் நெருங்கிய கூட்டாளியான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்கான் வானியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜாகீர் ராஷித் பாட் எனும் பெயர் கொண்ட புர்கான் வானி பொறியியல் படிப்பு முடித்தபின், தீவிரவாத அமைப்பில் சேர்ந்தார்.

புர்கான் வானியும் திரால் பகுதியில் உள்ள நூர்புரா கிராமத்தைச் சேர்ந்தவர், ஜாகீர் முசாவும திரால் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers