தமிழகத்தின் மாற்று சக்தியாக உருவெடுத்த மக்கள் நீதி மய்யம்.. தேர்தல் முடிவுக்கு பின்னர் கமல்ஹாசனின் முதல் பேட்டி

Report Print Raju Raju in இந்தியா

மக்களவை தேர்தலில் பல இடங்களில் மூன்றாவது இடம் வந்து மக்கள் நீதி மய்யம் ஆச்சரியமளித்த நிலையில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக பேசியுள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தமிழகத்தில் திமுக 38 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் பலரும் எதிர்பார்க்காத விதமாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பல தொகுதிகளில் மூன்றாவது இடம் வந்ததோடு கணிசமான வாக்குகளையும் அள்ளியது.

அதாவது நாம் தமிழர், அமமுக கட்சிகளை விட அதிக வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்று அசத்தியது.

இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல் முறையாக கமல்ஹாசன் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், நீங்கள் வெற்றி பெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என ஒரு தமிழனாக, இந்தியனாக, இந்தியக் குடிமகனாக மோடிக்கு வேண்டுகோள் விடுப்பதாக கூறியுள்ளார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் என்ற 14 மாத குழந்தையை தமிழக மக்கள் நடக்க, ஓடவிட்டு, எதிர்ப்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை அளித்துள்ளனர்.

புதிதாக உருவான கட்சிக்கு மக்கள் அளித்துள்ள இந்த ஆதரவு மிகப் பெரியது,

தேர்தல் தோல்வி கண்டு நாங்கள் துவண்டு போய் விடவில்லை.

தமிழக மக்களுக்கு தொடர்ந்து செயலாற்றுவோம்.

பணப் புயல் வீச்சுக்கு மத்தியில் எங்களுக்கு வாக்குகள் கிடைத்தது சாதனையே என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers