வெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன?

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாட்டில் உள்ள பாரில் தன்னை நிர்வாணமாக நடனமாட வற்புறுத்தி பெற்றோர் கொடுமைப்படுத்தியதாக கூறிய இளம்பெண் இது தொடர்பாக பொலிசாரிடம் மன்னிப்பு கேட்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோட்டூர்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.விஜயலட்சுமி. இந்நிலையில், விஜயலட்சுமி மீது அவரின் மகள் கேண்டி சமீபத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது கேண்டி கூறுகையில், என் அம்மா இன்ஸ்பெக்டரா இருக்காங்க. என்னுடைய அம்மாவும், அப்பாவும் என்னை வற்புறுத்தி ஒரு வருடமாக துபாய் பாரில் நிர்வாணமாக ஆட வைத்து பணம் சம்பாதித்தார்கள்.

ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால் அங்கிருந்து வெளியேறி என் அண்ணன் வீட்டில் தங்கி இருந்தேன். ஆனால் அங்கேயும் அடியாட்களுடன் வந்து அடித்து கொடுமைப்படுத்தி இழுத்து சென்றார்கள்.

என் அம்மா பொலிஸ் என்பதால் அவரை பற்றி யாரும் புகார் எடுக்க மறுக்கிறார்கள். இதனால என் உயிருக்கு ஆபத்து உள்ள நிலையில் என்னையும் என் அண்ணன் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், முறையிட்ட பொலிசாரிடமும் சொந்தக்காரர்களிடமும் தான் மன்னிப்பு கேட்க போவதாக கேண்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 26.4.2019 அன்று, என் அண்ணன், மற்றும் அண்ணி ஆகியோருடன் கொடுத்த குடும்ப பிரச்சனையை, செய்தியாளர்களிடம் தெரிவித்ததில், அது சம்பந்தமாக காவல் துறையிடமும், தன் உறவினர்கள், நண்பர்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் மன்னிப்பு கேட்க நாளை வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்