திருமண மேடையில் சீமான் செய்த காரியம்: கிண்டலடிக்கும் ரஜினி ரசிகர்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியின் புகைப்படத்தை தொட மறுத்ததை அவருடைய ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

சேலம் ஆர்ஆர் பிரியாணி அதிபர் ஆர்.ஆர் தமிழ்ச்செல்வன், அமுதா தம்பதியின் மகள் தமிழ் செல்விக்கும், சக்தி எண்டர்பிரைசஸ் அதிபர் ஹரிதாஸ், விமலா அவர்களின் மகன் மோகன்ராஜ்க்கும் கடந்த 16ம் திகதியன்று திருமணம் நடைபெற்றது.

அதற்கான வரவேற்பு நிகழ்ச்சி மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் அரசியல்வாதிகள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மணமக்களை வாழ்த்த மேடைக்கு சென்றார்.

அதேசமயம் ரஜினி ரசிகர்கள் சிலர், ரஜினியின் படம் பொரித்த புகைப்படத்தை மணமக்களுக்கு பரிசாக வழங்கினர். அப்போது அருகிலிருந்த சீமானையும் சேர்ந்து வழங்க அந்த ரசிகர் கேட்டுக்கொண்டதால், அவரும் புகைப்படத்தை தொட்டு வழங்க வந்தார்.

அதற்குள் கட்சியில் உள்ள உறுப்பினர் ஒருவர் எச்சரித்ததும், பட்டென்று புகைப்படத்திலிருந்து கையை எடுத்த சீமான் சிரித்தபடியே அதனை தொட மறுத்துவிட்டார்.

இந்த வீடியோவானது இணையத்தில் வைரலானதை அடுத்து, ரஜினி புகைப்படத்தை பார்த்ததற்கே சீமான் இந்த அளவிற்கு பயப்படுவதாகவும், நேரில் பார்த்தால் இன்னும் பயப்படுவார் என ரஜினி ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers