சிறுமி அடித்து கொலை... தாயை கைது செய்த பொலிசார்... அவரின் இரண்டாவது கணவருக்கு தொடர்பா?

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் 5 வயது சிறுமி மரணமடைந்த வழக்கில் தாயை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் அவரின் இரண்டாவது கணவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் நித்திய கமலா. இவர் தனது கணவர் முத்துபாண்டியன் மற்றும் மகள் லத்திகாஸ்ரீ (5) உடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் லத்திகாஸ்ரீ படிக்காமல் டிவி பார்த்து கொண்டு இருந்ததால் ஆத்திரமடைந்த நித்திய கமலா மகளை அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த குழந்தை மயக்கம் அடைந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லத்திகாஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் நித்திய கமலத்தை கைது செய்தனர்.

இதனிடையே பொலிசார் விசாரணையில், நித்திய கமலத்திற்கும் பிரசன்னா என்பவருக்கும் திருமணமாகி லத்திகாஸ்ரீ என்ற மகள் பிறந்தது தெரியவந்துள்ளது. ஆனால் நித்திய கமலத்திற்கும் பிரசன்னாவிற்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.

இதனையடுத்து முத்துப் பாண்டியன் என்பவருடன் நித்திய கமலத்திற்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. குழந்தை லத்திகா ஸ்ரீ, இவர்களுடனே வசித்து வந்துள்ளார். இந்நிலையில்தான் லத்திகா ஸ்ரீ உயிரிழந்துள்ளார்.

இதனிடையே முத்துப் பாண்டியன் அடித்ததால் குழந்தை இறந்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி அவரை காப்பாற்ற குழந்தையை தான் அடித்ததாக நித்திய கமலம் கூறியிருக்கலாம் எனவும் பொலிசார் கருதுகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers