மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே பிறந்தநாள் கொண்டாடிய 6 இந்து மகா சபை தொண்டர்கள்...

Report Print Abisha in இந்தியா

இந்திய விடுதலை போராட்டத்திற்குபின் மகாத்மா காந்தியை சுட்டுகொன்ற நாதுராம் கோட்சேவின் பிறந்தநாளை இந்து மகா சபை தொண்டர்கள் கொண்டாடி உள்ளனர்.

நாதுராம் கோட்சே, சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் பெயர். முன்னதாக கமல் தனது பிரச்சாரத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் திவிரவாதி நாதுராம் கோட்சே என்றும் அவர் பின்பற்றிய மதத்தை குறிப்பிட்டு கூறினார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் புனே பகுதியில் அமைந்த பராமதி என்ற இடத்தில் கடந்த 1910ம் ஆண்டு மே 19ந்திகதி பிறந்த கோட்சே-வின் பிறந்த நாளை இந்து மகா சபையை சேர்ந்த 6பேர் கொண்டாடி உள்ளனர்.

அவர்கள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோட்சே புகைப்படம் வைத்து அதனை சுற்றி விளக்கேற்றி உள்ளனர்.

இதன்பின் அவர்கள் இனிப்புகளை ஒருவருக்கொருவர் அளித்தும், கோவிலில் பஜனை பாடல்களை படித்தும் உள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று 6 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் குடிமகன்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டனர் என்றும் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர் என்றும் கூறிய போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers