உன்னை எவ்வளவு நம்பினேன்.. ஏமாற்றிவிட்டாயே என கதறிய காதலி... 8 வருட காதலின் பரிதாப முடிவு

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் காதலர்கள் திருமணம் செய்யவிருந்த நிலையில் தற்கொலை மிரட்டல் விடுத்து காதலனின் தாய் திருமணத்தை நிறுத்தியதால் தற்போது காதலன் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

திருவள்ளூரை சேர்ந்தவர் கனகா. இவர் நேற்று மகளிர் காவல் நிலையத்துக்கு தனது காதலன் குமார் உடன் வந்தார்.

இருவர் கையிலும் பூமாலை இருந்த நிலையில் கனகா உறவினர்களும் உடன் வந்தனர்.

இருவருக்கும் அங்கு திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குமாரின் அம்மா அங்கு வந்து, இந்தக் திருமணம் நடந்தால் இங்கேயே தீக்குளிப்பேன் என்று கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் திருமணம் நடக்காமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த கனகா, உன்னை எவ்வளவு தூரம் நம்பினேன். என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டாயே, என்னை திருமணம் செய்யாத நீ, சிறைக்குச் செல் என குமாரை நோக்கி கூறினார்.

இதையடுத்து, குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கனகா கொடுத்த புகாரின்பேரில் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்த திருமணம் நடக்காததற்கு பணம் தான் காரணம். குமாரும், கனகாவும் 8 வருடங்களாக காதலித்தார்கள்.

இந்த சமயத்தில் குமாருக்கு வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது.

அவர் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன் தன் கழுத்தில் தாலி கட்டவேண்டும் என கூறிய கனகா குமாரை காவல் நிலையத்துக்கு வரவழைத்தார்.

ஆனால் நல்ல வேலை கிடைத்ததால் பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்ணை குமாருக்கு திருமணம் செய்துவைக்க அவர் தாய் விரும்பி இந்த திருமணத்தை நிறுத்தினார். இதற்கு குமாரும் திடீரென சம்மதம் தெரிவித்தார். அதனால் தான் அவரை கைது செய்தோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers