குட்டியை காப்பாற்ற போராடும் தாய் யானை.. கற்களால் தாக்கிய மக்கள்: உருக வைக்கும் காட்சி

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் குட்டியை காப்பாற்ற போராடும் தாய் யானை, தன்னை சீண்டிய மக்களில் ஒருவரை கொன்றுள்ளது.

27 வயதான சலேட்ஸ் மகட் என்ற நபரே யானை தாக்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து வெளியான தகவலில், கிராம பகுதியில் நுழைந்த காட்டு யானை குட்டி ஈன்றுள்ளது. புதிதாக பிறந்த குட்டியால் நிற்க கூட முடியாததால், தாய் யானை குட்டியை முட்டி தூக்க தொடர்ந்து முயன்றுள்ளது.

யானையை பார்த்த கிராம மக்கள் கூட்டமாக கூடி யானை மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். குட்டி யானை மீது கற்கள் பட சினமடைந்த யானை, குட்டி யானையை காப்பாற்ற மக்களை விரட்டி சென்றுள்ளது. அப்போது, யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, இப்பகுதியலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், மேலும், இப்பகுதிகுயில் நுழைய தடை விதித்துள்ளோம். யானையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். யானை குட்டி ஈன்றுள்ளதால் அதை காட்டிற்குள் விரட்ட முடியது. குட்டி சரியானவுடன் தாயும், குட்டியும் காட்டிற்குள் செல்லும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...