குழந்தையும்.. கணவரும் வேண்டாம்..! பப்ஜி பார்டனர் தான் வேண்டும்: விவகாரத்து கேட்கும் பெண்

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான பெண் ஒருவர், பப்ஜி பார்டனருடன் சேர்ந்து வாழ விவகாரத்து கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், பெண்கள் உதவி மையமான அபயம் தொண்டு நிறுவனத்துக்கு போனில் தொடர்புக் கொண்டு அப்பெண், பப்ஜி பார்டனருடன் சேர்ந்து வாழ கணவரை விவகாரத்து செய்ய வேண்டும் எனவும், அதற்கு உதவுமாறு கோரியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தொண்டு நிறுவனத்தின் பெண் நிர்வாகி உடனே தொடர்பு கொண்ட பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினர் முன்னிலையில் அப்பெண்ணுடன் பேசியுள்ளனர்.

அதில், அப்பெண் தொடர்ந்து பல மணிநேரம் போனில் பப்ஜி விளையாடி வருவதால், குடும்பத்தினருடன் சிறு முரண்பாடு உள்ளதாக பெண் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து சில பயிற்சிகளை மேற்கொள்ளச் சொல்லி அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

தவிர, கணவருடன் விவாகரத்து பெற்று குடும்பத்தாரை விட்டு பிரிவது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யவும் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதுபோன்ற நிகழ்வை முதன் முறையாக காண்பதாக பெண் நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...