கோர தாண்டவமாடிய புயல்.. கழிவறையில் குடும்பத்துடன் வசிக்கும் முதியவர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் ஒடிசாவில் பானி புயலால் வீடு சேதம் அடைந்ததால் முதியவர் ஒருவர் குடும்பத்துடன் கழிவறையில் வசிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தை பானி புயல் கடந்த 3 ஆம் திகதி தாக்கியது. புயல், கனமழையால் பெரும்பாலான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுடைய வாழ்விடங்கள் அதிகமாக சேதம் அடைந்துள்ளது. மாநில அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஒடிசா மாநிலம் பெரும் இழப்பில் இருந்து மீண்டுவர கூடுதல் காலம் பிடிக்கும் என நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

பொருளாதார இழப்பும் அதிகமாக நேரிட்டுள்ளது. பெரும்பாலானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், கேந்தரபார்தா மாவட்டம் ராகுதிபூர் கிராமத்தில் கிரோத் ஜெனா (58) என்ற முதியவர் வீடு இல்லாத காரணத்தினால் தன்னுடைய மனைவி, இரு மகள்களுடன் அங்குள்ள கழிவறையில் வசித்து வருகிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், புயல் என்னுடைய வீட்டை அழித்துவிட்டது. ஆனால் கழிவறை என்னை காப்பாற்றியுள்ளது.

எங்கு போக முடியாத நிலை உள்ளது. எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஒதுக்கப்பட்ட கழிவறை இப்போது என்னுடைய வீடாகியுள்ளது.

இங்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்க வேண்டியது இருக்கும் என்பது தெரியவரவில்லை. புயல் என்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிட்டது.

என்னுடைய வீட்டை மீண்டும் கட்டமைக்க எந்த ஒரு வசதியும் கிடையாது. அரசு வீட்டை அமைத்து தரும் என காத்திருக்கிறேன். அதிகாரிகள் எனக்கு உதவி தொகையை வழங்கியுள்ளார்கள். நாங்கள் இப்போது கழிவறையில் வசிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...